

Santhosh NarayananYouTube
தென் கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்ல கொஞ்சுதே தாலாட்ட
எத்தனையோ காலம் வராத வானவில்
வந்தது போல் நீ பேச
உச்சியிலே நீந்தும் ஆகாச மீனென
துள்ளிடுதே உன் ஆச
மழை அடிக்கும் உன் சிரிப்பில்
செடி முளைக்கும் நான் பூவாக
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்
கொட புடிப்பேன் உன் தாயாக
நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேக்கும் வரை
நாம் ஆவோம் மாயப் பறவைகளே
தென் கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்ல கொஞ்சுதே தாலாட்ட
ஒத்தையிலே போகும் வெட்டவெளி மேகம்
மீட்டெடுத்து பாடாதோ றெக்கைவிரிச்சு
சீட்டெறும்பு போடும் நதிச்சத்திர கோலம்
சொல்லெடுத்து வீசாதோ உன்ன ரசிச்சு
தெரிஞ்சே நீ செய்யும் சேட்டை
தெளிவாக உன்ன காட்ட
அதில் கோடி ராகம்
நானும் மீட்ட
தெருவெங்கும் தேற ஓட்ட
மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட
பெருகாதோ காலம் வேகம் கூட்ட
பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
பனங்கருக்கும் (நீ நீ சொல்லும் கதை)
பால் சுரக்கும் (நான் நான் கேக்கும் வரை )
அத நெனச்சே நீ கொண்டாடு (நாம் ஆவோம் மாயப் பறவைகளே)
பசி மறக்கும்(நீ நீ சொல்லும் கதை)
நாள் பிறக்கும்(நான் நான் கேக்கும் வரை )
வலி மறந்தே நீ கூத்தாடு(நாம் ஆவோம் மாயப் பறவைகளே )
பனங்கருக்கும் பால் சுரக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு
Источник: LRCLIB
Похожих треков пока нет
Нет данных о слушателях
Нет данных о серверах
Нет последних воспроизведений