

Santhosh NarayananYouTube
உம்மா
வாடி என் பொட்டள முட்டாயே சின்ன ரத்தின கொட்டாயே
உன் குங்குமபொட்ட மேலவச்சாயே
வாடா என் அம்புலி மச்சானே என்ன அம்புல தச்சானே
என்ன கட்டிப்புடிச்சி தூங்கவச்சானே
ஊரில் கண்டதுமில்ல யாரும் உன்னாட்டம்
வாரி தந்ததுமில்ல இந்த கண்ணாட்டம்
ஜோடி கட்டுனதில்ல யாரும் உன்னாட்டம்
கோடி சந்திரன் உண்டு நள்ளிரவு விடியுமட்டும்
கெஞ்சுறனே, கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னவிட்டு வெலகி போகுறனே
ஆத்தி எத்தன மச்சம் தேடி முத்துர வச்சோம்
ஆச கத்துற சத்தம் புரியாதா-புரியாதா?
மூடிவெக்கிற கல்லும் தூரம்வெக்கிற சொல்லும்
தாவி அள்ளிக்க சொல்லும் இதுகூட தெரியாதா?
அட ஆடுயா
உம்மா
ஹே வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி
அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி
தோட்டா ஒரு கண்ணால தொலஞ்சேன் ஒரு பொண்ணால
வாகா இந்த வம்பால வல விரிச்சிட வந்தாளே
பாத்து வளச்ச தேக்கு
உன் பட்ட ஒடம்பு சோக்கு
என்ன குத்தும் குறும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வ குடுத்து தாக்கு ஏய்
என்னடி சித்திரமே இங்க நீ பத்திரமே
சொல்லுடி கட்டள எத்தன நான் செய்வேனே
அன்புல பெட்டகமே தங்குற கட்டடமே
ரத்தமே, முத்தமே சாமியே கொட்டுன வரம்
திக்குறனே, உன்ன கண்டு விக்குறனே
சேட்டயில சிக்குறனே கொஞ்ச-கொஞ்ச மெதந்து போகுறனே
கெஞ்சுறனே, கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னவிட்டு வெலகி போகுறனே
ஹே நெஞ்சுக்குள்ள பூரா உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம் என்ன இது மாயம்
நெஞ்சுக்குள்ள பூரா உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம் என்ன இது மாயம்
கெஞ்சுறனே, கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னவிட்டு வெலகி போகுறனே
Fuente: LRCLIB
Aún no hay canciones similares
Sin datos de oyentes
Sin datos de servidor
Sin reproducciones recientes